கைதி வேடத்தில் ரீமா

No comments
'யுவன் யுவதி' படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் மல்லுவுட் ஹீரோயின் ரீமா கல்லிங்கல். அடுத்து 'கோ' படத்தில் கெஸ்ட் ரோலில் தலைகாட்டினார். முல்லைபெரியாறு அணையை மையமாக வைத்து உருவான 'டேம் 999' பட பிரச்னையின்போது அப்படத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.

வாய்ஸ் கொடுத்த கையோடு கோலிவுட் படங்களுக்கு கால்ஷீட் தருவதையும் நிறுத்திவிட்டார். மல்லுவுட் படங்களில் மட்டுமே நடித்து வரும் ரீமா தற்போது 'எஸ்கேப் ஃபிரம் உகாண்டா' என்ற படத்தில் செய்யாத குற்றத்துக்காக தண்டனை அனுபவிக்கும் கைதியாக நடிக்கிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் முழுக்க ஆப்ரிக்காவில் நடந்துள்ளது. உகாண்டாவை சேர்ந்த நடிகர்களும் நடித்திருக்கின்றனர்.


No comments :

Post a Comment