சென்னை எக்ஸ்பிரஸ் ரூ.315 கோடி வசூல் சாதனை

No comments
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்துள்ள ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ திரைப்படம் கடந்த 8–ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. படம் வெளியான 3 நாட்களில் மட்டும் ரூ.100 கோடி வசூலை குவித்தது.

ஹிந்தி பட உலகில் வெளியான சில நாட்களில் அதிக வசூலை குவித்த படங்களில் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படம் முதல் இடத்தில் உள்ளது. பாலிவுட் உலகில் அதிக வசூலை குவித்த படங்களில் அமிர்கான் நடித்த ‘3 இடியட்ஸ்’ படம் ரூ.385 கோடி வசூல் சாதனை படைத்து முதல் இடத்தில் உள்ளது.

இதற்கு அடுத்தப்படியாக தற்போது ஷாருக்கான் நடித்துள்ள சென்னை எக்ஸ்பிரஸ் படம் ரூ.315 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. சல்மான்கான் நடித்த ‘ஏக் தா டைகர்’ படம் ரூ.310 கோடி குவித்தது. இதுவே தற்போதைய நிலவரப்படி முதல் 3 இடங்களில் உள்ளது.

‘சென்னை எக்ஸ்பிரஸ்’ திரைப்படம் இரண்டாம் வார முடிவின் நிலவரப்படி ரூ.315 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது.

 3 இடியட்ஸ் - 385 கோடி 2.
சென்னை எக்ஸ்பிரஸ் - 315 கோடி ( இரண்டாம் வார முடிவில் )
ஏக் தா டைகர் - 310 கோடி

No comments :

Post a Comment