கல்யாண சமையல் சாதம் பாடல் வெளியீடு
சென்னை : எவரெஸ்ட் என்டர்டயின்மென்ட் சார்பில் அருண் வைத்தியநாதன், ஆனந்த் கோவிந்தன் தயாரிக்கும் படம், ‘கல்யாண சமையல் சாதம்’. பிரசன்னா, லேகா வாஷிங்டன் நடித்துள்ளனர். கிருஷ்ண வசந்த் ஒளிப்பதிவு. அரோரா இசை அமைத்துள்ளார். ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கி உள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.பாடல்களை வெளியிட்டு பாலு மகேந்திரா பேசியதாவது: இந்தப் படத்தின் இயக்குனரும், ஒளிப்பதிவாளரும் என் மாணவர்கள். படத்தின் பெயர்தான் சைவம் மாதிரி இருக்கிறது. ஆனால் அசைவப்படம். இங்கு பேசிய எல்லோரும் படத்தில் பரபரப்பாக பேசப்படும் ஒரு விஷயம் இருப்பதாகச் சொன்னார்கள்.
நான் உங்களுக்கு ஒரு கீ கொடுக்கிறேன். ஆண்களாக பிறந்த எல்லோரும் ஒரு நாள் அந்த அனுபவத்தை பெற்றே தீருவார்கள். அதைத்தான் படத்தின் முக்கிய அம்சமாக வைத்திருக்கிறார்கள். இதில் நடிக்க துணிச்சல் வேண்டும். பிரசன்னா எனக்கு பிடித்த நடிகர். அவர் துணிச்சலாக நடித்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் கே.எஸ்.ரவிகுமார், நலன் குமாரசாமி, விஜய் ஆண்டனி, சந்தோஷ் நாராயணன், ஆனந்தா சுரேஷ், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, ஞானவேல்ராஜா, சி.வி.குமார், சினேகா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அருண் வைத்தியநாதன் வரவேற்றார். ஆர்.எஸ்.பிரசன்னா நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment