காதலனுடன்தான் செல்வேன் ,பெற்றோருடன் செல்ல விரும்பவில்லை- சேரன் மகள் (Video-Song)

No comments
காதல் வலையில் சிக்கிய சேரன் மகள், காதலனுடன்தான் செல்வேன் என்று தொடர்ந்து பிடிவாதமாக இருக்கிறார். டைரக்டர் சேரன் மகள் தாமினியும், உதவி இயக்குனர் சந்துருவும் காதலிக்கிறார்கள். அவருடைய காதலுக்கு சேரன் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காமினி புகார் கொடுத்தார்.

காதலனிடம் தன்னை சேர்த்து வைக்க வேண்டும். காதலனுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். இதையடுத்து சேரன், அவரது மனைவி செல்வராணி, மகள் தாமினி ஆகியோரிடம் நேற்றிரவு போலீசார் விசாரணை நடத்தினார்கள். துணை கமிஷனர் சிவக்குமார், உதவி கமிஷனர் ஷியாமளாதேவி ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். அப்போது தாமினிக்கு போலீசார் அறிவுரை கூறினார்கள்.

தற்போது படித்து கொண்டு இருக்கும் தாமினியிடம் படிப்பை முடித்த பிறகு திருமணம் பற்றி முடிவு செய்யலாம். அதுவரை பெற்றோரிடம் இருக்கும் படி அறிவுரை கூறினார்கள். ஆனால் அதை தாமினி ஏற்கவில்லை. காதலனுடன்தான் செல்வேன் என்று கூறினார். நேற்று நடந்த விசாரணையின்போது காதலன் சந்துரு வரவில்லை. அவர் கோவைக்கு சென்று இருந்தார். ஆனால் சந்துருவின் அம்மா, அக்காள் ஆகியோர் வந்திருந்தனர். மகளிடம் சேரன் கெஞ்சினார். உன்னை எதுவும் செய்ய மாட்டேன் வீட்டிற்கு வா என்று கண் கலங்கியவாறு அழைத்தார். ஆனால் தாமினி தந்தையின் அழைப்பை ஏற்கவில்லை. காதலனுடன்தான் செல்வேன் என்றார்.

நள்ளிரவு வரை போலீசார் தாமினிக்கு ‘கவுன்சிலிங்’ கொடுத்தனர். ஆனால் அவர் பெற்றோருடன் செல்ல விரும்பவில்லை. இந்த நிலையில் இன்று 2–வது நாளாக தாமினிக்கு கவுன்சிலிங் கொடுக்க போலீசார் முடிவு செய்தனர். அதன்படி தாமினி ஆயிரம்விளக்கு போலீஸ் நிலையத்திற்கு இன்று வந்தார். அவருக்கு பெண் போலீஸ் அதிகாரி அறிவுரை, ஆலோசனைகளை வழங்கினார்.

படிக்க கூடிய வயதில் படிக்க வேண்டும், காதல், திருமணம் போன்றவற்றை அதன் பிறகு முடிவு செய்யலாம். பெற்றொருடன் செல்வதுதான் தாமினிக்கு பாதுகாப்பு என்று தெரிவித்தனர். ஆனால் அதை அவர் ஏற்கவில்லை. தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வருகிறார். காதலனுடன்தான் செல்வேன் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

இதேபோல காதலன் சந்துருவுக்கும் தனியாக கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. அவரும் தாமினியுடன் வாழ்வேன் என்று பிடிவாதமாக கூறினார். இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறும்போது, தாமினி காதல் வலையில் விழுந்து விட்டார். அவருக்கு தொடர்ந்து கவுன்சிலிங் கொடுத்து வருகிறோம். அவருக்கு வயது 19 ஆகிறது. சான்றிதழ் பார்த்த பிறகு தான் அவர் மேஜர் வயதை கடந்துள்ளார் என்று தெரிந்தது. அதனால் ஓரளவிற்கு தான் அவருக்கு அறிவுரை கூற முடியும். அதை ஏற்பதும், ஏற்காததும் அவரது விருப்பம்.

ஆனால் தாமினி பெற்றோருடன் செல்ல விரும்ப வில்லை. காதலனுடன் செல்லவே விரும்புகிறார் என்றார். இதற்கிடையே சேரனின் மனைவி செல்வராணி நேற்றிரவு உடல்நலம் பாதிக்கப்பட்டார். ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமானதால் மயங்கி விழுந்துள்ளார். கணவர் மீது போலீசில் மகள் புகார் கொடுத்தது, போலீசார் விசாரணைக்கு சேரனை அழைத்தது சென்றது போன்றவற்றால் செல்வராணி மன உளைச்சலுக்கு ஆளானதால் அவருக்கு ரத்த அழுத்தம் உயர்ந்ததாக கூறப்படுகிறது.

No comments :

Post a Comment