கல்யாணம் பற்றி என்னிடம் கேட்காதீர்கள் - தபு

No comments
கல்யாணம் செய்வீர்களா என்று என்னிடம் கேட்காதீர்கள் என்று நிருபர்களை கடிந்துகொண்டார் தபு. சிறைச்சாலை, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சிநேகிதியே உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பாலிவுட் நடிகை தபு. இவருக்கு 41 வயதாகிறது. இவரிடம் நிருபர்கள் சிலர், உங்களுக்கு திருமணம் எப்போது? என்று கேட்டனர்.

 இதைக்கேட்டு கோபம் அடைந்த தபு, இந்த கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள். எத்தனை நாளைக்குத்தான் இதே கேள்வியை கேட்பீர்கள். இதெல்லாம் பழங்கதையாகி விட்டது என்றார். பிறகு கோபத்தை அடக்கிக்கொண்டு பேட்டி அளித்தார். அவர் கூறும்போது, ஆரம்பத்தில் நல்ல கதாபாத்திரங்கள் வந்தால் சம்பளத்தை குறைத்துக்கொண்டு நடிப்பேன். அந்த காலம் மலையேறி விட்டது.

சம்பளத்தை குறைத்துக்கொண்டு எனது தகுதியை நானே குறைத்துக்கொள்ள விரும்பவில்லை. இனி கால்ஷீட் வேண்டுமென்றால் படமும் பெரியதாக இருக்க வேண்டும், சம்பளமும் பெரிதாக தர வேண்டும், கேரவன், பைவ் ஸ்டார் ஓட்டலில் அறை என என்னை நல்ல முறையில் கவனித்துக்கொள்ள வேண்டும் என்றார்.

 அடுத்து மென்டல் இந்தி படத்தில் சல்மான் கான் சகோதரியாக நடிக்கிறார் தபு. தெலுங்கு படங்களிலும் தபு நடித்திருப்பதால் தெலங்கானா பிரச்னை பற்றி கேட்டபோது, இப்போதுதானே சொன்னேன், என்னிடம் அரசியல் கேள்வி கேட்காதீர்கள் என கோபம் அடைந்தார். அத்துடன் பேட்டியை முடித்துக் கொண்டார்.No comments :

Post a Comment