10 வருடம் சேர்த்ததை மத கஜ ராஜாவில் முதலீடு செய்திருக்கிறேன்
ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரித்துள்ள படம் ‘மத கஜ ராஜா’. விஷால், அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம், பிரகாஷ் ராஜ் நடித்துள்ளனர். சுந்தர்.சி இயக்கி உள்ளார். விஜய் ஆண்டனி இசை அமைத்துள்ளார். சில பிரச்னைகள் காரணமாக வெளிவராமல் இருந்த இந்தப் படத்தை விஷால், தனது நிறுவனமான விஷால் பிலிம்பேக்டரி சார்பில் வெளியிடுகிறார்.இதுபற்றி நிருபர்களிடம் விஷால் கூறும்போது, ‘செப்டம்பர் மாதத்துடன் நான் சினிமாவுக்கு வந்து 10 வருடம் ஆகிறது. பல ஏற்ற தாழ்வுகளை பார்த்துவிட்டேன். சில படங்களுக்கு சில தடைகள் வரும். அது சரிசெய்யப்பட்டு வெளியாகும். இந்தப் படத்துக்கு நிறைய தடைகள். படத்தின் மேல் உள்ள நம்பிக்கையால், எனது பத்து வருட அனுபவம் உட்பட அனைத்தையும் இதில் முதலீடு செய்திருக்கிறேன்.
நிச்சயம் இந்தப் படம் வரவேற்பை பெறும்’ என்றார். இயக்குனர் சுந்தர்.சி கூறும்போது, ‘80,களில் வெளிவந்த ‘சகலகலா வல்லவன்’, ‘முரட்டுக்காளை’ மாதிரி கமர்சியல் படம் இயக்கும் ஆசை இருந்தது. அதை நிறைவேற்ற இயக்கிய படம்தான் இது. உயிரைக் கொடுத்து எடுத்த படம். இது வெளிவராமல் இருந்தது எனக்கு வருத்தம். விஷால் படத்தின் ஹீரோ என்பதையும் தாண்டி, நிஜ ஹீரோவாக மாறி இந்தப் படத்தை சுமக்கிறார்.
மிகப்பெரிய வெற்றிப்படமாக இது அமையும்’ என்றார் ஹீரோயின் வரலட்சுமி, மனோ பாலா, சிட்டிபாபு, பைனான்சியர் அன்பு, பாடலாசிரியர்அண்ணாமலை உடன் இருந்தனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment