ராஜா ராணி புதிய சாதனை

No comments
கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் ஹாட் டாபிக், ‘ராஜா ராணி’ திரைப்படமும், அதன் விளம்பரங்களும் தான். ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சந்தானம் என பெரிய நட்சத்திரக் கூட்டணி நடித்துள்ள இந்த படத்தினை ஏ.ஆர்.முருகதாஸின் ‘ஏ.ஆர்.எம். புரொடக்‌ஷன்ஸ்’ மற்றும் ‘ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ’ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

இயக்குனர் ஷங்கரின் அசிஸ்டென்ட் அட்லி இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபதில் வெளியாகியது.


 சென்ற 23-ஆம் தேதி யு-டியூபில் வெளியான இப்படத்தின் டிரைலரை இன்றைய நிலவரப்படி 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர், இன்னும் நிறைய பேர் விறுவிறுப்பாக பார்த்து வருகின்றனர்.

 சமீப காலத்தில் வெளியான டிரைலர்களின் சாதனையை முறியடிக்கும் விதமாக ’ராஜா ராணி’ படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment