பிறமொழியில் கலக்கும் மாஜி ஹீரோக்கள்

No comments
தமிழில் ஹீரோக்களாக வலம் வந்த சத்யராஜ், பிரபு உள்ளிட்ட நடிகர்கள் தற்போது மலையாளம், தெலுங்கு, இந்தியில் குணசித்ர நடிகர்களாக கலக்கிக்கொண்டிருக்கின்றனர்.

ஷாருக்கான் நடித்துள்ள சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் தீபிகா படுகோன் தந்தையாக சத்யராஜ் நடித்திருக்கிறார். இந்நிலையில் தெலுங்கில் பெஜவாடு என்ற படத்தில் பிரபு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இதில் டோலிவுட் ஹீரோ நாக சைதன்யா, அமலா பால் ஜோடி. பெஜவாடு படம் தமிழில் விக்ரம் தாதா என்ற பெயரில் டப்பிங் ஆகிறது. விவேக் கிருஷ்ணா டைரக்ட் செய்திருக்கிறார். ஏ.என்.பாலாஜி தயாரிக்கிறார்.

இதில் கோட்டா சீனிவாசராவ், அஜெய், அபிமன்யூசிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ஊரையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பெரும்புள்ளி ஒருவர் சந்தர்ப்ப வசத்தால் குற்றவாளியாகிறார். அந்த பழியிலிருந்து அவரை அவரது தம்பி எப்படி மீட்கிறார் என்பதே கதை கரு.No comments :

Post a Comment