நிரந்தரமானது எது? ரஜினிகாந்த் விளக்கம்

No comments
அமைதிதான் நிரந்தரம். அதைத்தான் என் மனம் நாடுகிறது என்றார் ரஜினி. ரஜினியின் வாழ்க்கை பற்றி குணசித்ர நடிகர் மோகன் ராமன் சமீபத்தில் சென்னையில் நடந்த விழாவில் பேசினார்.

அவர் கூறும்போது, கண்டக்டராக இருந்து ரஜினி சூப்பர் ஸ்டார் ஆனார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் கண்டக்டர் வேலைக்கு வருவதற்கு முன் பல்வேறு இடங்களில் அவர் வேலை தேடினார். ஒரு கட்டத்தில் அலுவலகம் ஒன்றில் பியூனாக வேலை செய்தார். பிறகுதான் அவர் கண்டக்டர் ஆனார்.

நண்பர் ராஜ்பகதூர்தான் ரஜினிக்கு நடிப்பு திறமை இருக்கிறது என்பதை கண்டறிந்து அவரை தனது செலவில் நடிப்பு கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்தார் என்றார். இந்த நிகழ்ச்சிக்காக ரஜினி பேசி தந்த ஆடியோ ஒலிபரப்பப்பட்டது. அதில் பேசிய ரஜினி, இளம் வயதில் நான் எதையும் ஆர்வமாகவே கற்றுக்கொண்டிருந்தேன்.

அது நான் விரும்பி கற்றுக்கொண்டிருந்த நேரம். இன்னும் நீங்கள் கற்றுக்கொண்டிருக்கிறீர்களா? என்கிறார்கள். ஆனால் நான் ஆன்மிகத்தை நாடுகிறேன். அமைதியை தேடுகிறேன். சந்தோஷம் வரும், போகும். ஆனால் நிரந்தரமாக இருப்பது அமைதி மட்டும்தான் என்றார்.



No comments :

Post a Comment