இந்தி படத்தில் இருந்து அசினை நீக்கியது ஏன் ?

No comments
ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் கேட்டதால் அசினுக்கு நடிக்க வந்த வாய்ப்பு ஸ்ருதிக்கு கைமாறியது. இந்தியில் ஆமிர்கான், சல்மான்கான் என பிரபல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த அசின் இரண்டாம் கட்ட ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு வந்தபோது ஏற்க மறுத்தார். தற்போது அவருக்கு இந்தியில் சினிமா வாய்ப்புகள் குறைந்துவிட்டது.

 இந்நிலையில் அசின் நடித்த ‘ரெடிÕ என்ற படத்தை இயக்கிய அனீஸ் பாஸ்மி ‘வெல்கம் 2Õ என்ற படத்தை இயக்குகிறார். இந்தப்படத்தில் நடிக்க முதலில் சோனாக்ஷி சின்ஹாவிடம் பேசினார். அவர் மற்றப் படங்களில் பிசியாக இருந்ததால் அசினையே ஒப்பந்தம் செய்ய முடிவு செய்தார்.

அசினிடம் பேசிய போது அவரது மானேஜர் அதிக சம்பளம் கேட்டதாகக் கூறப்படுகிறது. 1 கோடி ரூபாய்க்குமேல் சம்பளம் கேட்டதாகவும் அதை குறைக்க மறுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் அவரை நீக்கிவிட்டு ஸ்ருதி ஹாசனை ஒப்பந்தம் செய்தார்.


No comments :

Post a Comment