இயக்குனரின் கோபத்துக்கு ஆளான சமந்தா!

No comments
தான் நடிக்கும் கதாபாத்திரங்களை உளறிவிடுவதால் இயக்குனரின் கோபத்துக்கு ஆளாகியுள்ளார் நடிகை சமந்தா. சித்தார்த்துடன் தெலுங்கில் நடித்து வந்தது வரை, தினமும் ஒரு அரை மணி நேரமாவது அவருடன் கடலை போடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார் சமந்தா.

 தற்போது அவரும் அருகில் இல்லாததால் தினமும் தான் பேச நினைப்பதையெல்லாம் தனது டுவிட்டரில் அரங்கேற்றுகிறாராம். அதைப்படித்து விட்டு அவரது ரசிகர்களும், நண்பர்களும் கமென்ட் கொடுத்து வருகிறார்களாம்.

 ஆனால், சில சமயங்களில் தான் நடிக்கும் படங்களில், படப்பிடிப்புகளில் நடைபெறும் விசயங்களையும் டுவிட் செய்து விடும் சமந்தா, அந்த படங்களில் தான் நடிக்கிற வேடத்தைப்பற்றியும் பேச்சுவாக்கில் உளறுவதைப்போன்று கொட்டி விடுகிறாராம். இதனால் படம் முடிகிற வரைக்கும் படத்தின் கதையையும், நடிக்கிற கதாபாத்திரத்தையும் சீக்ரெட்டாக வைத்திருக்க வேண்டும் என்று சமந்தாவிடம் கண்டிசன் போட்டிருக்கும் இயக்குனர்கள், அவர் எல்லா ரகசியங்களையும் டுவிட்டரில் போட்டு உடைப்பதைப்பார்த்து டென்சன் ஆகிறார்களாம்.

 அதில் சமீபத்தில் ஒரு இயக்குனர் சமந்தாவிடம் ரொம்பவே கோபித்துக்கொண்டாராம். இதனால் இனி சினிமாவை தவிர்த்து எனது பர்சனல் விசயங்களை மட்டுமே டுவிட் செய்வேன் என்று கூறி உள்ளாராம் சமந்தா.

No comments :

Post a Comment