சூர்யா- லிங்குசாமி ஷூட்டிங் திடீர் தள்ளிவைப்பு

No comments
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் திடீரென்று தள்ளிவைக்கப்பட்டது. சிங்கம் 2 முடித்த கையோடு புதிய படத்தில் நடிக்க திட்டமிட்டிருந்தார் சூர்யா. அவரிடம் லிங்குசாமி, கவுதம் மேனன் கால்ஷீட் கேட்டிருந்தனர்.

இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்திய சூர்யா இருவரது படங்களிலும் மாறி மாறி நடிக்க முடிவு செய்தார். ஆனால் கவுதம் மேனன் சூர்யாவுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையில் கருத்து வேற்றுமை உருவானது.

இதையடுத்து தொழில்நுட்ப காரணங்களுக்காக இப்படத்தின் ஷூட்டிங்கில் பிறகு பங்கேற்க உள்ளதாக சூர்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து லிங்குசாமி இயக்கத்தில் நடிக்க தயாரானார் சூர்யா. ஸ்கிரிப்ட் ஓகே செய்து இம்மாதம் ஷூட்டிங்கும் நடத்த திட்டமிடப்பட்டது.

திடீரென்று ஸ்கிரிப்ட்டில் மாற்றம் செய்ய உள்ளதாக லிங்குசாமி தெரிவித்தார். உடனடியாக ஷூட்டிங் ஷெட்யூல் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து சூர்யா ஜோடியாக நடிப்பதாக இருந்த சமந்தா, ஜூனியர் என்டிஆர் நடிக்கும் ராமய்யா வஸ்தாவய்யா தெலுங்கு பட ஷூட்டிங்கிற்காக ஸ்பெயின் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார். சூர்யாலிங்குசாமி பட ஷூட்டிங் செப்டம்பர் மாதம் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

No comments :

Post a Comment