மாதுரி தீட்சித் பற்றி கேள்வி நிருபர் மீது ஐஸ்வர்யா பாய்ச்சல்

No comments
மூத்த நடிகை குத்தாட்டம் ஆடியது பற்றி எங்கிட்ட கேக்காதீங்க என்று நிருபர்கள் மீது சீறினார் ஐஸ்வர்யா ராய். அபிஷேக் பச்சனை மணந்த ஐஸ்வர்யாராய் நடிப்புக்கு ஓய்வு கொடுத்துவிட்டு குழந்தை ஆராத்யாவை கண்ணும் கருத்துமாக கவனித்து வருகிறார்.


மீண்டும் சினிமாவுக்கு வருவது எப்போது என்று கேட்கும்போதெல்லாம் நழுவலான பதில் அளித்து வருகிறார். நான் சினிமாவில்தான் நீடிக்கிறேன். ரீ என்ட்ரி எப்போது என்று கேட்பதே தவறு என சில மாதங்களுக்கு முன் பதில் அளித்தார்.

 இந்நிலையில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் ராம் லீலா என்ற படத்தில் ஐஸ்வர்யாராய் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடப்போவதாக தகவல் வெளியானது.

 சமீபத்தில் மும்பையில் நிகழ்ச்சியொன்றுக்கு வந்த ஐஸ்வர்யாராயிடம், மூத்த நடிகைகள் குத்தாட்டம் ஆடுவதுபற்றி என்ன நினைக்கிறீர்கள் என ஒரு நிருபர் கேட்டார். (சமீபத்தில் யே ஜவானி ஹே தீவானி படத்துக்காக மாதுரி தீட்சித் ஒரு பாடலுக்கு ஆடியதை மனதில் வைத்து இந்த கேள்வியை நிருபர் கேட்டாராம்). நிருபரின் கேள்வியால் கோபம் அடைந்த ஐஸ்வர்யாராய், ‘இந்த கேள்வியை எங்கிட்ட கேட்காதீங்க, எந்த மூத்த நடிகை குத்தாட்டம் ஆடினாரோ அவரிடம் போய் கேளுங்கள் என்று சூடாக பதில் அளித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

No comments :

Post a Comment