ஊழலை வெளிப்படுத்தும் உண்மை

No comments
மதர்கிரீன்லேண்ட் மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் மூலம் ரவிக்குமார் தயாரித்து ஹீரோவாக நடிக்கும் படம், ‘உண்மை’. அவர் ஜோடியாக சுஜிபாலா நடிக்கிறார். மற்றும் ராதாரவி, கோட்டா சீனிவாசராவ், ஷகிலா, சிங்கம்புலி உட்பட பலர் நடிக்கின்றனர்.

படம் பற்றி ரவிக்குமார் கூறியதாவது: இந்தியில் ‘சாவரியா’, ‘கொமிலா’ படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றினேன். தமிழில் படம் இயக்க வேண்டும் என்று நானே தயாரித்து இயக்கி நடிக்கும் படம் இது. அரசியல்வாதிகளின் ஊழல், இதன் காரணமாக சாதாரண மக்கள் படும் அவஸ்தை உள்ளிட்ட விஷயங்களை வைத்து படம் தயாராகிறது.

நான் போலீஸ் கமிஷனராக நடித்துள்ளேன். ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்துவருகிறது.



No comments :

Post a Comment