என்னமோ ஏதோ

No comments
ரவிபிரசாத் புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.ரவிகுமார், பி.வி.பிரசாத் தயாரிக்கும் படத்துக்கு, ‘என்னமோ ஏதோ’ என்று பெயர் வைத்துள்ளனர். இது தெலுங்கில் ஹிட்டான ‘அலா மொதலயிந்தி’ படத்தின் ரீமேக். இதில் ‘கடல்’ படத்துக்குப் பிறகு கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கிறார்.

அவர் ஜோடியாக ரகுல் பீரித்தி சிங், நிகிஷா படேல் நடிக்கின்றனர். மற்றும் பிரபு, அழகம் பெருமாள், மதன் பாப், மனோபாலா உட்பட பலர் நடிக்கின்றனர். இமான் இசை. மதன் கார்க்கி பாடல்கள். ஒளிப்பதிவு, கோபி ஜகதீஸ்வரன், ரவி தியாகராஜன் இயக்குகிறார்.

இந்தப் படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்துவருகிறது. அடுத்த மாதம் இறுதியில் பாங்காக்கில் பாடல்கள் படமாக்கப்பட இருக்கிறது.




No comments :

Post a Comment