தனுஷின் வேலையில்லா பட்டதாரி

No comments
’மரியான்’ படத்தைத் தொடர்ந்து ‘நய்யாண்டி’ படத்தில் பிசியாகி விட்டர் தனுஷ். ‘நய்யாண்டி’யை முடித்ததும் தனது 25-வது பட வேலைகளில் இறங்க இருக்கிறார் தனுஷ். இந்தப் படத்திற்கு ‘வேலையில்லா பட்டதாரி’ என்று பெயர் வைத்திருக்கிறார்.

 ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் தயாராகவிருக்கும் இந்தப் படத்தின் கதை, ஒளிப்பதிவு, இயக்கம் ஆகிய பொறுப்புக்களை ஆர்.வேல்ராஜ் ஏற்றிருக்க, அனிருத் இசை அமைக்கிறார். இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அமலா பால் நடிக்க இருக்கிறார்.

தனுஷும், அமலா பாலும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது. இந்த படங்கள் தவிர கே.வி.ஆனந்த் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment