மும்பை மாடல் அழகி அறிமுகம்

No comments
அர்ஜூன் விஜயராகவன், ஜிப்ரான் செல்மான் நடிக்கும் படம் உன்னோடு ஒரு நாள். ஹீரோயினாக மும்பை மாடல் அழகி நீலம் அறிமுகமாகிறார். இப்படம் பற்றி தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் கூறியது: உயிருக்கு உயிராக இருக்கும் நண்பர்களுக்கு இடையில் இளம்பெண் குறுக்கிடுகிறாள்.

அவளை ஒரு நண்பன் காதலிக்க அவளோ இன்னொரு நண்பனை காதலிக்கிறாள். காதலில் தோல்வி அடைந்த நண்பன் வெளிநாடு செல்கிறான். இதற்கிடையில் இளம்பெண்ணுக்கும் காதல னுக்கும் திருமணம் நடக்கிறது. வெளிநாடு சென்றவன் திரும்பி வருகிறான்.

நண்பனின் மனைவியாகிவிட்ட பழைய காதலியை மீண்டும் காதலிக்க முயல்கிறான். இதன் பிறகு நடக்கும் காட்சிகள் திடுக்கிடும் வகையில் அமைகிறது. அர்ஜூன் விஜயராகவன், ஜிப்ரான் செல்மான் ஹீரோக்களாக நடிக்க மும்பை மாடல் அழகி நீலம் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

விஜயராஜ் ஒளிப்பதிவு. சிவபிரகாசம் இசை. மாலதி, ருத்ரா பாடல்கள். சென்னை, புதுச்சேரியில் 50 நாட்கள் ஷூட்டிங் நடந்து முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. துரை கார்த்திகேயன் இயக்கி உள்ளார். விஜயராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். சிவபிரகாசம் இசை அமைக்கிறார். இம்மாத இறுதியில் படம் ரிலீஸ்.

No comments :

Post a Comment