பழங்கால வேடங்களுக்காக தோற்றம் மாறும் வேதிகா

No comments
பழங்கால கதைகளுக்காக தோற்றங்களை மாற்றி நடிக்கிறார் வேதிகா. இதுபற்றி பரதேசி பட ஹீரோயின் வேதிகா கூறியதாவது: பாலா இயக்கிய பரதேசி படத்தில் நடித்த அனுபவம் வாழ்நாளில் மறக்க முடியாது. உருவாக்கும் கதாபாத்திரத்துக்கு ஏற்ப அதில் நடிப்பவர்களும் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என்று அவர்களை தயார் படுத்துவார் பாலா. தேயிலை எஸ்டேட்டில் பணியாற்றும் ஒரு பெண் எப்படி இருப்பார் என்று அந்த கதாபாத்திரம் ஏற்பதற்கு முன் நான் எண்ணி கூட பார்த்ததில்லை.

அந்த உருவத்தை என்னுள் கொண்டு வந்தார். இயல்பான எனது சிவப்பு நிறத்தை குறைப்பதற்காக கருப்பு மேக்கப் போட்டு கொண்டேன். அது சரித்திர பின்னணி படம். அதேபோல் மற்றொரு பழங்கால சரித்திர பின்னணி படமாக உருவாகிறது வசந்தபாலன் இயக்கும் காவிய தலைவன்.

இதில் எனது ஒரிஜினல் சிவப்பு தோற்றத்திலேயே நடிக்கிறேன். பாரம்பரிய உடைகள் அணிந்து நடிப்பது புது அனுபவம். இவ்வாறு வேதிகா கூறினார்.


No comments :

Post a Comment