சர்ச்சை கதைகளுக்கு இயக்குனர் சாமி முழுக்கு

No comments
சாமி இயக்கும் படத்தில் வர்ஷா அஸ்வதி ஹீரோயினாக நடிக்கிறார். மிருகம், சிந்து சமவெளி, உயிர் போன்ற சர்ச்சைக்குரிய படங்களை இயக்கிய சாமி அடுத்து இயக்கும் படம் கங்காரு. இதுவும் சர்ச்சைக்குரிய படமா என்றபோது பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியது: தங்கை மீது பாசம் கொண்ட அண்ணன் ஒரு கட்டத்தில் பாதிக்கப்படுகிறார்.

 அவரை தாய்போல் இருந்து பார்த்துக்கொள்கிறாள் தங்கை. இவருக்கு பிறகு அண்ணனுக்கு மனைவியாக வருபவர் ஒரு தாயாக இருந்து தன் கணவனை கவனித்துக்கொள்கிறார். குடும்ப பாச கதையாக உருவாகி இருந்தாலும் காமெடிக்கும் முக்கியத்துவம் இருக்கிறது.

 சிந்து சமவெளி உள்ளிட்ட சர்ச்சைக்குரிய படங்களை இயக்கிய சாமி இப்படத்தில் முழுக்க குடும்ப பாங்கான இயக்குனராக மாறி இருக்கிறார். இதன் மூலம் சர்ச்சைகளுக்கு முழுக்குபோடுவார்.

 இதில் அர்ஜுனா ஹீரோ. வர்ஷா அஸ்வதி ஹீரோயின். மற்றும் பிரியங்கா, தம்பி ராமையா, கஞ்சா கருப்பு, ஆர்.சுந்தர்ராஜன், கலாபவன் மணி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ரவி கே சந்திரனிடம் உதவியாளராக பணியாற்றிய ராஜரத்தினம் ஒளிப்பதிவு செய்கிறார். வைரமுத்து பாடல்கள் எழுத பாடகர் ஸ்ரீனிவாஸ் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். இதன் ஷூட்டிங் கொடைக்கானலில் நடக்கிறது.


No comments :

Post a Comment