2013ல் இதுவரை 48 இசை அமைப்பாளர்கள் அறிமுகம்

No comments
தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் இசை அமைப்பாளர்கள் அறிமுகம் அதிக அளவில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு 60க்கும் மேற்பட்ட இசை அமைப்பாளர்கள் அறிமுகமானார்கள். அவர்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் அடுத்த படத்துக்கு இசை அமைக்கவில்லை. இந்த ஆண்டு இதுவரை 96 நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகி இருக்கிறது.

இதில் 48 படங்களில் புதிய இசை அமைப்பாளர்கள் அறிமுகமாகி இருக்கிறார்கள். இவர்களில் கணேஷ் ராகவேந்திரா (மதில்மேல் பூனை), கோபி சுந்தர் (யாருடா மகேஷ்) பிரிட்டோ அச்சு (சுண்டாட்டம்), இலக்கியன் (யமுனா) தவிர மற்றவர்கள் கவனம் பெறவில்லை. ஏ.ஆர்.ரகுமான், இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், தேவி ஸ்ரீபிரசாத், ஸ்ரீகாந்த் தேவா ஆகியோர் ஒன்றிரண்டு படங்களுக்கு மட்டுமே இசை அமைத்துள்ளார்கள்.


திரையிசைத் துறைக்குள் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் வந்து விட்டதால் அது இசை அமைப்பை எளிதாக்கி விட்டது. சிறிய அறையிலேயே ரெக்கார்டிங் ஸ்டூடியோ அமைத்துக் கொள்ள முடியும். அறிமுகமாகும் இசை அமைப்பாளர்களில் பெரும்பாலானவர்களுக்கு சொந்தமாக ரெக்கார்டிங் ஸ்டூடியோ இருக்கிறது. சிலர் வாடகைக்கு வீடு பிடித்து அதில் தற்காலிக ரெக்கார்ட்டிங் ஸ்டூடியோவை அமைத்துக் கொள்கிறார்கள்.

தற்போது தயாரிப்பில் இருக்கும் பெரும்பாலான படங்களுக்கு அறிமுக இசை அமைப்பாளர்களே இசை அமைத்து வருகிறார்கள். இந்த ஆண்டு இறுதிக்குள் 80 இசை அமைப்பாளர்களுக்கு மேல் அறிமுகமாவார்கள் என்று தெரிகிறது.

No comments :

Post a Comment