தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்கள் ஒரு பார்வை (வீடியோ இணைப்பு)

No comments
தீபாவளியை முன்னிட்டு பல படங்கள் களத்தில் இறங்குவதற்கு தயாராக இருக்கின்றன.
வருகின்ற தீபாவளியை முன்னிட்டு ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக நாளுக்கு நாள் பல படங்களின் ட்ரெய்லர்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

அவற்றில் தீபாவளிக்கு களம் இறங்கும் கமலின் விஸ்வரூபம் 2 ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆனால் உலகநாயகனோ அதிக திரையரங்குளில் இப்படத்தினை திரையிட திட்டமிட்டிருப்பதால் படத்தின் வெளியீட்டை ஒத்திவைத்துள்ளாராம்.

அடுத்தபடியாக விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், ஆர்யா , நயன்தாரா, மற்றும் டாப்ஸி ஆகியோரின் கலக்கலான நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஆரம்பம்.இப்படம் வருகின்ற தீபாவளிக்கு களமிறங்க தயாராகி விட்டதாம்.

நடிகர் ஜீவா, த்ரிஷா, ஆன்ட்ரியா,வினய் மற்றும் சந்தானம் ஆகியோரின் அட்டகாசமான நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் என்றென்றும் புன்னகை.

இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படமும் தீபாவளி ரேசில் கலக்குவதற்கு ரெடியாகிவிட்டதாம்.

கும்கி புகழ் விக்ரம் பிரபுவின் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் இவன் வேற மாதிரி.

இதில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக மொடல் அழகி சுரபி அறிமுகமாகியுள்ளார்.

இப்படமும் தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லையாம்.

மொத்தத்தில் தீபாவளி சரவெடியில் கலக்க தயாராகும் திரைப்படங்களை பார்ப்பதற்கு மிகுந்த எதிர்பார்ப்போடு உள்ளார்கள் ரசிகர்கள்.


No comments :

Post a Comment