10 விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட விஜய்யின் துப்பாக்கி

No comments
விஜய்யின் துப்பாக்கி படமானது சிமா விருதுக்காக 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா வரும் செப்டம்பர் மாதம் 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் துபாயில் நடைபெறவுள்ளது.

இந்த விருது கடந்த ஆண்டு தான் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த ஆண்டு நடக்கும் விழாவை ஆர்யா, ஸ்ரேயா, ராணா மற்றும் சோனு சூட் ஆகியோர் தொகுத்து வழங்குகிறார்கள்.

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுக்கு விஜய்யின் துப்பாக்கி படம் சிறந்த நடிகர், நடிகை, இயக்குனர், நகைச்சுவை நடிகர் உள்பட 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் தனுஷ், ஸ்ருதி ஹாஸன் நடித்த 3 படம் சிறந்த நடிகர், நடிகை உள்பட 7 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கும்கி விக்ரம் பிரபு, லக்ஷ்மி மேனன் நடித்த கும்கி படம் சிறந்த படம், இயக்குனர், புதுமுக கதாநாயகன் உள்பட 7 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சுந்தரபாண்டியன் சசிகுமார், லக்ஷ்மி மேனன் நடித்த சுந்தரபாண்டியன் படம் சிறந்த படம், புதுமுக இயக்குனர், நகைச்சுவை நடிகர் உள்பட 5 பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


ஓகே ஓகே உதயநிதி ஸ்டாலின் கதாநாயகன் அவதாரம் எடுத்த ஒரு கல் ஒரு கண்ணாடி படம் சிறந்த புதுமுக கதாநாயகன், சிறந்த நடிகை, சிறந்த நகைச்சுவை நடிகர் மற்றும் நடனம் ஆகிய பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

No comments :

Post a Comment