மெசேஜ் சொல்லும் கமர்ஷியல் படம் வணக்கம் சென்னை.
சிவா, சந்தானம், பிரியா ஆனந்த் நடிக்கும் படம் வணக்கம் சென்னை. கிருத்திகா உதயநிதி எழுதி இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: தேனி பகுதியிலிருந்து சென்னை வரும் சிவா, லண்டனிலிருந்து சென்னை வரும் பிரியா ஆனந்த் சந்திக்கின்றனர்.இருவரும் எதிர்கொள்ளும் சம்பவங்கள், அவர்களுக்குள் மலரும் காதல் என்று கதை செல்கிறது. காமெடி கலந்த முக்கிய கதாபாத்திரத்தில் சந்தானம் நடிக்கிறார். முதலில் இக்கதையை வெளி தயாரிப்பாளருக்கு இயக்க எண்ணி இருந்தேன்.
இதற்கிடையில் எனது கணவர் உதயநிதி கதையை கேட்டார். அவருக்கு பிடித்துவிடவே அவரே தயாரிப்பதாக கூறினார். சீன்களை பொறுத்தவரை சொன்ன பட்ஜெட்டில் எடுத்தாலும் பாடல் காட்சிகள் கூடுதல் பட்ஜெட் செலவு செய்து எடுக்கப்பட்டுள்ளது.
இக்கதை என் மனதில் 3 வருடமாக இழையோடிக்கொண்டிருந்தது. இப்போதெல்லாம் படங்களில் எல்லாவற்றுக்கும் ரசிகர்கள் லாஜிக் பார்க்கிறார்கள். அப்படி இல்லாவிட்டால் கேள்வி கேட்கிறார்கள்.
அதையெல்லாம் மனதில் வைத்து கதை அமைக்கப்பட்டிருக்கிறது. மெசேஜுடன் கூடிய கமர்ஷியல் படமாக உருவாகி இருக்கிறது. ஒளிப்பதிவு ரிச்சர்ட் எம்.நாதன். இசை அனிரூத்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment