தென்னிந்திய சர்வதேச திரைப்பட விழா பிரபுவுக்கு சைமாஸ்ரீ விருது
தென்னிந்திய சர்வதேச திரைப்பட விழா, கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு துபாயில் பிரமாண்டமாக நடந்தது. இதன் இரண்டாவது விருது விழா, செப்டம்பர் 12, 13,ம் தேதிகளில் சார்ஜாவிலுள்ள எக்ஸ்போ மையத்தில் நடக்கிறது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட திரைத்துறையினர் கலந்துகொள்கின்றனர். இதில் நான்கு மொழிகளிலும் சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் உட்பட 19 பிரிவுகளில் விருது வழங்கப்பட இருக்கிறது.இந்த விருதுகளை ரசிகர்கள் தேர்வு செய்ய வேண்டும். www.siima.in என்ற இணையதளத்துக்கு சென்று தங்களுக்கு பிடித்த படம், இயக்குனர், இசை அமைப்பாளர்கள் உட்பட பல்வேறு பிரிவுகளில் ரசிகர்கள் தங்கள் ஓட்டை பதிவு செய்யலாம். அந்த ஓட்டுகளின் அடிப்படையில் சிறப்பு ஜூரிகள், விருதுக்கான இறுதி முடிவை எடுப்பார்கள். விழாவின் முதல் நாளில் ‘அடுத்த தலைமுறை விருது’ வழங்கப்படும். இந்நிகழ்ச்சியை நடிகை பார்வதி ஓமனக்குட்டனும் நகைச்சுவை பேச்சாளர் ஆஷ் சன்ட்லரும் தொகுத்து வழங்குவார்கள்.
மறுநாள் ‘பாபுலர் அவார்ட்’ நிகழ்ச்சி நடக்கும். இதை ஆர்யா, ராணா, சோனு சூட், ஸ்ரேயா தொகுத்து வழங்குவார்கள். விருது நிகழ்ச்சிக்கிடையே பிரமாண்டமான கலைநிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கிறது. இவ்விழாவின் ஒரு பகுதியாக இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. இதில் நடிகர் பிரபுவுக்கு சைமாஸ்ரீ விருது வழங்கப்படுகிறது. சினிமாவில் பத்தாண்டாக ஹீரோயினாக நடித்துவரும் த்ரிஷா மற்றும் காவ்யா மாதவன் கவுரவிக்கப்பட இருக்கிறார்கள்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment