கதைதான் சம்பளத்தை தீர்மானிக்கிறது: விமல்

No comments
 விமல் நடித்துள்ள ‘தேசிங்கு ராஜா’ படம் கடந்த வாரம் வெளிவந்தது. இதையொட்டி நிருபர்களிடம் விமல் கூறியதாவது: ‘தேசிங்கு ராஜா’ காமெடிப் படம். அதைத்தாண்டி அதில் லாஜிக் பார்க்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். இரண்டரை மணி நேரம் சிரித்து விட்டு போக வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் எடுக்கப்பட்ட படம். அந்த இலக்கை படம் அடைந்திருப்பது சந்தோஷம். நான் ஒரு கோடிக்கு மேல் சம்பளம் கேட்பதாக வரும் செய்திகளில் உண்மையில்லை. எனது படங்களின் மார்க்கெட்படி, தயாரிப்பாளர்கள் கொடுப்பதை வாங்கிக் கொள்கிறேன்.

சில நேரங்களில் கதைகள் சம்பளத்தை தீர்மானிக்கிறது. நல்ல கதை வரும்போது  தயாரிப்பவர்களுக்கு பெரிய சம்பளம் கொடுக்க முடியாத நிலை இருக்கும். என்னால் கதையையும் விட முடியாது. அதனால் அவர்கள் கொடுக்கும் சம்பளத்தில் நடிக்கிறேன். சிலர் நான் கேட்கும் சம்பளத்தை கொடுக்கிறார்கள். சிலர் கிராமத்தில் துண்டுபோட்டு விலை பேசுவது மாதிரி பேரம் பேசுவதும் உண்டு. எப்படிப் பார்த்தாலும் எனக்கு சம்பளம் பெரிய விஷயம் இல்லை. கடைசிவரைக்கும் சினிமாவில் இருக்க வேண்டும். சினிமா தரும் பணத்தில் சோறு சாப்பிட வேண்டும் என்பதுதான். இவ்வாறு விமல் கூறினார். இயக்குனர் எழில், பிந்து மாதவி, ரவிமரியா, சிங்கம்புலி, வினு சக்கரவர்த்தி உடன் இருந்தனர்.

No comments :

Post a Comment