ரகளபுரம் வசனத்துக்கு 2 கட்

No comments
 கருணாஸ் தயாரித்து, ஹீரோவாக நடித்துள்ள படம், ‘ரகளபுரம்’. இதற்கு சென்சார் 2 கட் அளித்துள்ளது. இதுபற்றி கருணாஸ் கூறியதாவது:
மாமி, டீல் என்ற 2 வசனங்களை மட்டும் நீக்கச் சொன்னார்கள். அதை நாங்கள் ஓசையில்லாமல் செய்திருக்கிறோம். மற்றபடி படத்தை பாராட்டி, ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். செப்டம்பர் 13,ம் தேதி படம் ரிலீசாகிறது. அங்கனா, சஞ்சனா சிங், கோவை சரளா உட்பட பலர் நடித்துள்ளனர்.

குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய ஜனரஞ்சகமான காமெடி படமாக இருக்கும். அடுத்து ‘தப்பாட்டம்’, லட்சுமிகாந்த் இயக்கத்தில் ‘மூணு சீட்டு’ படங்களில் ஹீரோவாக நடிக்க உள்ளேன். ‘சகுந்தலாவின் காதலன்’, ‘சரவணப் பொய்கை’ உட்பட பல படங்களில் காமெடி வேடத்திலும் நடித்து வருகிறேன். இவ்வாறு கருணாஸ் கூறினார்.

No comments :

Post a Comment