களிமண்ணு. திரைவிமர்சனம்

No comments
பிளெஸ்ஸியின் களிமண்ணு படம் வெளியாகியிருக்கிறது. ஸ்வேதா மேனனின் நிஜ பிரசவக் காட்சியை படத்தில் பயன்படுத்தியதற்கு எழுந்த எதிர்ப்பும், ஆதரவும் களிமண்ணுவை 2013ன் எதிர்பார்ப்புக்கு‌ரிய படமாக்கியது. ஸ்வேதா மேனன் ஒரு பார் டான்சர். சினிமாவில் ஐட்டம் டான்சராக நுழைகிறார்.

தயா‌ரிப்பாளர் ஒருவர் ஸ்வேதாவை பயன்படுத்திவிட்டு கைவிட, தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அவரை காப்பாற்றும் டாக்சி டிரைவர் ஸ்வேதாவை திருமணம் செய்கிறார். மகிழ்ச்சியாக செல்லும் தாம்பத்தியத்துக்கு நடுவில் ஒரு படத்தில் ஹீரோயினாகவும் ஸ்வேதா நடிக்கிறார். படத்தின் ப்‌‌ரீமியர் ஷோ அன்று, விபத்தில் ஸ்வேதாவின் கணவருக்கு மூளைச்சாவு ஏற்படுகிறது.



அவரால் பிழைக்க முடியாது, உடல் உறுப்புகளை தானம் கொடுக்கும்படி ஸ்வேதாவிடம் கேட்கிறார்கள். இந்நிலையில், கோமோவில் இருக்கும் கணவ‌ரின் விந்தணுக்களை எடுத்து கருத்த‌ரிக்க முடியும் என்பதை ஸ்வேதா மேனன் அறிந்து கொள்கிறார். அதற்கு பலதரப்புகளிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்புகிறது. அதனை புறந்தள்ளி கணவ‌ரின் விந்தணுக்களை கொண்டு மருத்துவர்களின் உதவியுடன் கருத்த‌ரிக்கிறார். தனது தாய்மைக்காக போராடும் ஸ்வேதா மேனன், பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையில் குழந்தையை பெற்றெடுக்கிறார்.



 இன்றைய மலையாள சினிமாவில் பிளெஸ்ஸி தனித்தீவு. நவீன மலையாள வாழ்க்கையை புதிய தலைமுறை இயக்குனர்கள் ஜாலியாகவும், ரசிக்கும்படியும் எடுத்துக் கொண்டிருக்க, பத்மராஜன், பரதன், லோகிததாஸ் வழியில் வந்த பிளெஸ்ஸியால் அந்த ஒட்டத்தில் சட்டென்று கலக்க இயலவில்லை. அவரது படங்கள் அசலான மலையாளியின் ஆன்மாவை ஒவ்வொரு படத்திலும் தேடிக் கொண்டிருக்கிறது.

மகிழ்ச்சிகரமான தருணம் எந்த விநாடியும் கைநழுவிப் போகலாம் என்ற பதற்றத்துடனே அவரது படங்கள் உருவாகின்றன. காழ்ச்சா, தன்மாத்ரா, ப்ரணயம் என்று அவ‌ரின் படங்களில் மகிழ்ச்சிகரமான வாழ்க்கை பே‌ரிழப்பில் முடிவதை காணலாம்.

No comments :

Post a Comment