மம்முட்டிக்கு அம்மாவாகும் மீனா

No comments
மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் அம்மாவாக நடிக்கிறார் மீனா. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1982ம் ஆண்டு வெளியான 'நெஞ்சங்கள்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், நடிகை மீனா.

 தமிழில் சூப்பர் ஸ்டார், உலகநாயகன் போன்ற நட்சத்திரங்களோடு வலம் வந்த இவர் தற்போது மலையாள திரைப்படத்தின் மூலம் மறுபிரவேசம் எடுக்கிறார். 'பால்யகால சகி' என்ற பெயரில் உருவாக்கப்படும் மலையாள படத்தில் மம்முட்டியும், இஷா தல்வாரும் நடிக்கின்றனர்.

 இந்த படத்தின் மூலம் மம்முட்டியின் அம்மாவாக மீனா மலையாள திரையுலகில் தற்போது மறுப் பிரவேசம் செய்கிறார். மோகன்லாலுடன் கடைசியாக 2005ல் வெளியான 'உடயநனு தாரம்' படத்தில் ஜோடியாக நடித்த அவர், தற்போது மோகன்லால் நடிப்பில் உருவாகும் 'திரிஷ்யம்' படத்திலும் 2 குழந்தைகளின் பாசமான அம்மாவாக நடிக்கிறார்.

 இந்த 2 படங்களும் வெளியான பிறகு கோலிவுட்டில் மீனா மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments :

Post a Comment