ஹாலிவுட்டுக்கு சவால் விடும் கிரிஷ்-3

No comments
இளைஞர்கள், சிறுவர்கள், குடும்பத்தினர் என அனைவரும் ரசித்து இந்திய அளவில் மாபெரும் வெற்றி பெற்ற படம் கிரிஷ். மீண்டும் ஹிருத்திக் ரோஷன் நடிக்க, ராகேஷ்ரோஷன் இயக்கத்தில் பிரம்மாண்டமான படமாக உருவாகிறது கிரிஷ்-3.

 180 கோடியில் இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் இப்படம், ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் வகையில் உருவாகி வருகிறது. இதற்காக நான்கு வருடங்கள் உழைத்திருக்கிரும் இயக்குனர், இதை தனது கனவுப்படம் என கூறிவருகிறார்.

 கிட்டத்தட்ட 70க்கும் மேலான ஹாலிவுட் வல்லுனர்களுடன், அவதார் படத்திற்கு கிராபிக்ஸ் எபெக்ட்ஸ் பண்ணிய நிறுவனம் தான் இப்படத்திற்கும் கிராபிக்ஸ் வேலைகளை செய்கிறது.

 ஹிருத்திக் ரோஷன் ஜோடியாக ப்ரியங்கா சோப்ரா நடிக்கிறார், வில்லனாக விவேக் ஓபராய் நடிக்கிறார். தீபாவளிக்கு வரவிருக்கும் இப்படம், தமிழகத்தில் மட்டும் 400 திரையரங்குகளில் வெளிவர உள்ளது.

 பல வெற்றிப்படங்களை கொடுத்த சிபு தமீம் பிலிம்ஸ் இப்படத்தை வெளியிடுகிறது.

 அத்துடன் சென்னையில் நடைபெறவுள்ள ஓடியோ வெளியீட்டுக்கு ஹிருத்திக் ரோஷன், ப்ரியங்கா சோப்ரா வரவுள்ளார்கள் என்பது கூடுதல் தகவல்.


No comments :

Post a Comment