உலகத் தமிழ்ப்பரப்பின் மென்வலுவில் புகலிட ஈழத்தவர் திரைத்துறையின் நம்பிக்கை தரும் முயற்சிகள் !(Photo)

No comments
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இடம்பெற்று வரும் ஈழத்தவர் திரைப்படங்களின் சங்கமமாக பரிஸ் தமிழ் திரைவிழாவும், கனடா மொன்றியல் உலகத் திரைப்பட விழாவில் பங்கெடுத்துள்ள A Gun and Ring திரைப்படமும், புகலிட ஈழத்தவர் திரைத்துறையில் நம்பிக்கை தரும் முயற்சிகளென தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட என்னுள் என்ன மாற்றமோ எனும் திரைப்படம் உட்பட கனடா, சுவிஸ், அவுஸ்றேலியா ஆகிய நாடுகளில் உருவாக்கப்பட்ட ஈழத்தவர் படைப்புக்களின் மூன்று நாள் நிகழ்வாக பரிஸ் தமிழ்திரைவிழா இடம்பெற்று வருகின்றது.

சமவேளை சீனாவின் சங்காய் திரைவிழாவில் பங்கெடுத்து உலகத் தமிழர்களின் கவனத்தினைப் பெற்றிருந்த கனேடிய மண்ணில் உருவாக்கப்பட்ட ஈழத்தவர் படைப்பான A gun and Ring  திரைப்படம் கனாடாவின் மொன்றியல் உலகத் திரைப்பட விழாவில் பங்கெடுத்துள்ளது.

இவ்விரு முயற்சிகளும் புகலிட ஈழத்தவர்களின் நீண்ட தொரு திரைப்பட முயற்சிகளின் நம்பிக்கை கீற்றுக்களாக அமைந்துள்ளதென ஆர்வலக்களின் கருத்தாக அமைந்துள்ளது.
.No comments :

Post a Comment