கிராம மக்களுக்கு கடாவெட்டி விருந்து வைத்த காமெடி நடிகர் கஞ்சா கருப்பு.

No comments
கிராம மக்கள் 1500 பேருக்கு கடா வெட்டி விருந்து வைத்தார் கஞ்சா கருப்பு. தனுஷ், விஷால் போன்ற நடிகர்கள் வரிசையில் தயாரிப்பாளர் ஆகி இருக்கிறார் காமெடி நடிகர் கஞ்சா கருப்பு. வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற பெயரில் அவர் தயாரிக்கும் படத்தை எம்.பி.கோபி டைரக்ட் செய்கிறார்.

படம் பற்றி இயக்குனர் கூறியதாவது: அங்காடி தெரு மகேஷ், தீப்பெட்டி கணேஷ், பிளாக் பாண்டி, ராவ், ரகசியா, இமான் அண்ணாச்சி நடிக்கும் இப்படத்தில் முக்கிய வேடம் ஏற்று நடிக்கிறார் கஞ்சா கருப்பு. இதன் ஷூட்டிங் அவரது சொந்த ஊரான சிவகங்கை பகுதியில் நடக்கிறது.

1500 பேர் பங்கேற்கும் வையுங்கடா வையுங்கடா விருந்து வையுங்கடா வெட்டுங்கடா வெட்டுங்கடா கடா வெட்டுங்கடா என்ற பாடல் சமீபத்தில் படமாக்கப்பட்டது. மதுகுபட்டி, மேலூர் உள்ளிட்ட 3 கிராமங்களை சேர்ந்த மக்கள் பங்கேற்றனர். பாடல் காட்சியில் வருவது போல் அனைவருக்கும் கடா வெட்டி விருந்து வைத்தார் கஞ்சா கருப்பு.

மேலும் அப்பகுதியில் சிதிலமடைந்து கிடந்த சாலையை ரூ.2 லட்சம் செலவில் சீர் செய்து கொடுத்தார். இப்படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார். சாலை சகாதேவன் ஒளிப்பதிவு செய்கிறார்.


No comments :

Post a Comment