சேரனின் பாசப்போராட்டம் வென்றது : பெற்றோருடன் செல்ல தாமினி விருப்பம்
திரைப்பட இயக்குநர் சேரன் மகள் தாமினி, பெற்றோருடன் செல்கிறேன். காதலன் சந்துருவுடன் செல்ல வில்லை என்று ஐகோர்ட்டில் கூறியுள்ளார்.
இயக்குநர் சேரன் மகள் தாமினி, சந்துரு என்ற வாலிபருடன் காதல் வயப்பட்டு வீட்டை விட்டு வெளியே றினார். இதைதொடர்ந்து சேரன் போலீசில் அளித்த புகாரில், சந்துருவின் நடவடிக்கை சரியில்லை என்றும், அவரது காதலை நான் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் கூறினார். தன் மகள் தனக்கு வேண்டும் என்று பாசப்போராட்டம் நடத்தினார்.
சந்துருவின் தாயார் ஈஸ்வரியம்மாள், தாமினி தன் மகனைத்தான் விரும்புகிறார். அவனுடன் தான் வாழ விரும்புகிறார் என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து நீதிபதிகள், தாமினிக்கு இரு வாரங்கள் அவகாசம் கொடுத்து இன்று நேரில் விசாரணை நடத்தினர்.
அப்போது, தாமினி தான் பெற்றோருடன் செல்வதாக நீதிபதிகளிடம் கூறியுள்ளார். சேரனின் பாசப் போரா ட்டம் வென்றது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment