பணக்கார மாப்பிள்ளை தேடும் மாஜி ஹீரோயின்
ஆடம்பரமாக செலவு செய்யும் ரியா சென்னுக்கு மேக்கப் பராமரிப்பு செலவு அதிகமாவதால் அவருக்கு பணக்கார மாப்பிள்ளை தேடுகிறார் அவரது அம்மா. பாலிவுட்டில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் மூன் மூன் சென். இவரது மகள் ரியா சென், தமிழில் ‘தாஜ்மகால்’, ‘குட்லக்’, ‘அரசாட்சி’ போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.தமிழில் வெற்றி பெற முடியாததால் பாலிவுட்டுக்கு போனார். இவரது சகோதரி ரைமா சென்னும் இந்தி படங்களில் நடிக்கிறார். மகள்களுக்கு மாப்பிள்ளை தேடும் படலத்தில் ஈடுபட்டிருக்கிறார் மூன் மூன் சென். ‘‘ரைமா சென் உயரமான, கலகலப்பாக பேசும் மாப்பிள்ளையை விரும்புகிறாள். ரியாவோ அழகான மாப்பிள்ளையை விரும்புகிறாள்.
இருவருமே பணத்தின் மதிப்பை உணரவில்லை. இரண்டு மகள்களுமே தங்கள் மேக் அப், ஆடை உள்ளிட்ட பராமரிப்புக்கு ஆடம்பரமாக செலவிடுபவர்கள். அதற்கு ஏற்ப செலவு செய்யும் பணக்கார மாப்பிள்ளைகளைதான் இருவருக்கும் தேடிக்கொண்டிருக்கிறேன். மற்றபடி வேறு ஒன்றும் பெரிதாக எதிர்பார்க்கவில்லை’’ என்றார் மூன் மூன் சென்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment