சென்டிமென்ட் பார்த்து படம் இயக்கவில்லை: பிரபுசாலமன்

No comments
சென்டிமென்ட் பார்த்து படம் இயக்கவில்லை என்றார் பிரபு சாலமன். ‘மைனா’, ‘கும்கி’ படங்களை இயக்கிய பிரபு சாலமன், அடுத்து ‘கயல்’ என்ற படம் இயக்குகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: கலகலப்பான படங்கள் மட்டுமல்லாமல் மாறுபட்ட காதல் கதை அம்சம் கொண்ட படங்கள் வெற்றி பெறுகின்றன. ‘மைனா’, ‘கும்கி’ போன்ற படங்கள் அதற்கு உதாரணம். அடுத்து இயக்க உள்ள ‘கயல்’ படம் காதலை மையமாக கொண்டது.

 மற்ற இரண்டு படங்களைவிட இது இன்னும் பவர்புல்லான ஸ்கிரிப்ட். கடலும், நதியும் சங்கமிக்கும் இடங்களில்தான் கயல் என்ற மீன் கிடைக்கும். அதுபோல் இப்படத்தின் நாயகி கயல்விழி தனிப்பட்ட குணம் கொண்டவள். அந்த கதாபாத்திரத்தில் ஆந்திராவை சேர்ந்த ஆனந்தி அறிமுகமாகிறார். வின்சென்ட் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

முக்கிய வேடத்தில் இமான் அண்ணாச்சி நடிக்கிறார். ஆர்.கே.வர்மா ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார். தயாரிப்பு பி.மதன். இணை தயாரிப்பு ஜேம்ஸ். இதன் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. பொன்னேரி, நாகர்கோவில், கன்னியாகுமரி, மைசூர், சிமோகா, மேகாலயா, லடாக் போன்ற இடங்களில் ஷூட்டிங் நடக்கிறது.

ஜனவரியில் படம் ரிலீஸ். என் படங்களுக்கு இரண்டெழுத்து, மூன்றெழுத்து டைட்டில் வைப்பது பற்றி கேட்கின்றனர். இதில் சென்டிமென்ட் எதுவும் பார்க்கவில்லை. கதைக்கு பொருத்தமான டைட்டில்தான் வைக்கிறேன்.


No comments :

Post a Comment