இந்திய சினிமா நூற்றாண்டு விழா தெலுங்கு நடிகர்களின் நிகழ்ச்சிகள் கேன்சல்
இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவில் தெலுங்கு நடிகர், நடிகைகள் மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டார்கள் என்று அம்மாநில நடிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா, 21ம் தேதியில் இருந்து 24ம் தேதி வரை சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடக்கிறது. விழாவை தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்.
நிறைவு விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்துகொள்கிறார். மற்றும் தென் மாநில முதல்வர்கள் கலந்துகொள்கிறார்கள். 22ம் தேதி காலை கன்னட பட உலகினரின் கலை நிகழ்ச்சியும் மாலை தெலுங்கு பட உலகினர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளும் 23ம் தேதி, மலையாள திரைத்துறையினரின் நிகழ்ச்சிகளும் நடப்பதாக இருந்தது. இந்நிலையில் இதில் தெலுங்கு திரையுலகினர், கலைநிகழ்ச்சிகள் நடத்துவதில் இருந்து பின் வாங்கியுள்ளனர்
. இதுபற்றி தெலுங்கு திரைப்பட நடிகர்கள் சங்கம் கூறும்போது, ‘தெலங்கானா பிரச்னையால் இங்குள்ள மக்கள் போராட்டத்தில் இருக்கும்போது நாங்கள் மட்டும் அங்கு மேடைகளில் ஆடிக்கொண்டிருக்க முடியாது. இந்த மாதிரியான சூழ்நிலையில் நாங்கள் விலகி இருப்பதுதான் சரியான முடிவாக இருக்கும். ஆனால் தெலுங்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக இதில் கலந்துகொள்வார்கள்’ என்று தெரிவித்துள்ளது
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment