நடிகர் ராகுலை மணக்கிறார் பாடகி சின்மயி
மணிரத்னம் இயக்கிய ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் இடம் பெற்ற ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ என்ற பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானவர் சின்மயி. சிவாஜி படத்தில் இவர் பாடிய ‘சஹானா சாரல் தூவுதோ’, எந்திரன் படத்தில் ‘கிளிமஞ்சாரோ’ ஆகிய பாடல்கள் மிகவும் பிரபலமானவை.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் பாடல்கள் பாடியுள்ளார்.
இந்நிலையில் பாடகி சின்மயி, நடிகர் ராகுல் ரவீந்திரனை காதல் திருமணம் செய்துகொள்ளப் போகிறார். இவர்கள் திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை சின்மயியின் தாய் பத்மாசினி உறுதிபடுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, நடிகர் ராகுல் ரவீந்திரனுக்கும், எனது மகள் சின்மயிக்கும் அடுத்த ஆண்டு திருமணம் நடைபெறவுள்ளது. விரைவில் நிச்சயதார்த்தத்தை நடத்த முடிவு செய்துள்ளோம் என்று கூறியுள்ளார். நடிகர் ராகுல் ரவீந்திரன், ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தின் மூலம் அறிமுகமானவர். தற்போது கிருத்திகா உதயநிதி இயக்கும் ‘வணக்கம் சென்னை’ படத்திலும் நடித்திருக்கிறார். மற்றும் சில தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment