நற்பணியை வெளியே சொல்வதில்லை : நயன்தாரா பேட்டி
கிளாமரைவிட அதிகம் பணிகள் செய்ய விரும்பு வதாக கூறுகிறார் நயன்தாரா. ஆர்யாவுடன் ஜோடி சேர்ந்து நயன்தாரா நடித்துள்ள ராஜா ராணி படத்துக்கு தணிக்கை குழு யு சான்றிதழ் வழங்கி இருக்கிறது. அட்லி இயக்க, ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்திருக்கிறார்.
அடுத்தடுத்து தனது படங¢கள் ரிலீசாவதால் நயன்தாரா சந்தோஷத்தில் இருக்கிறார். அத்துடன் இப்போதெல்லாம் நயன்தாரா நிறைய தத்துவம் பேச ஆரம்பித்துவிட்டார்.
அவர் கூறியது: நான் என்ன நற்பணிகள் செய்கிறேன் என்பதை வெளியில் சொல்வதில்லை.
நான் நடிக்க வந்திருக்கிறேன். நடிப்பு, தோற்றம் அல்லது கிளாமரை பார்த்து ரசிகர்கள் எங்களை ரசிக்கிறார்கள். ஆனால் அதைவிட இன்னும் நிறைய பணிகள் எங்களுக்காக காத்திருக்கிறது. பெண்கள் எப்போதுமே பல்வேறு திறமைகள் கொண்டவர்கள்.
சினிமா, தொழில்துறை, வங்கி என எந்த துறையில் இருந்தாலும் நாட்டுக்காக அவர்கள் ஏதாவது செய்ய வேண்டும் என நினைப்பார்கள். அந்த எண்ணம் எனக்கும் இருக்கிறது'
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment