நாசா விஞ்ஞானியுடன் ஜோடி சேரும் மீரா ஜாஸ்மின்

No comments
விண்வெளி ஆய்வு நிலையங்களின் முதன்மையாக விளங்கும் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் பணியாற்றக்கூடிய இந்திய விஞ்ஞானி ஒருவர் தமிழ் படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். இவர் பெயர் பார்த்திபன். விஞ்ஞானியாக பணியாற்றி வரும் இவருக்கு இப்போது சினிமாவில் நடிக்க ஆசை வந்துள்ளது. 

இதனால் சினிமாவில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள களத்தில் குதித்துள்ளார். நாசா விஞ்ஞானியான பார்த்திபன் நடிக்கப் போகும் படத்திற்கு ‘விஞ்ஞானி’ என பெயர் வைத்துள்ளனர். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை மீரா ஜாஸ்மின் நடிக்க உள்ளார்.

 இப்படத்தை ‘ரசிக்கும் சீமானே’ படத்தை இயக்கிய வித்யாதரன் இயக்க உள்ளார். அறிவியல் சம்பந்தமான தகவல்களை சொல்ல வரும் இப்படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

No comments :

Post a Comment