ஆரம்பம் படத்தில் சென்டிமென்ட்டுக்கு முடிவு

No comments
ஆரம்பம் படத்தில் தீம் இசை இல்லை என்பதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அஜீத் நடித்த மங்காத்தா, பில்லா, பில்லா 2 படங்களில் பாடல்கள் தவிர பிரத்யேகமாக தீம் இசை அமைக்கப்பட்டிருந்தது. இது அஜீத் ரசிகர்களின் செல்போன்களில் ரிங்டோனாக மாறியது.

 இதனால் அஜீத் படத்தில் தீம் இசை இடம்பெறுவது சென்டிமென்ட்டாக மாறிபோனது. அதுபோல் அஜீத் நடிக்கும் ஆரம்பம் படத்திலும் தீம் மியூசிக் இடம்பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தீம் இசை எதுவும் இப்படத்தில் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது.

 இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. வரும் 19ம் தேதி படத்தின் ஆடியோ வெளியிட உள்ள நிலையில் இது ரசிகர்களுக்கு ஏக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் இதுவரை பட தரப்பிலிருந்து தீம் இசை இல்லை என்ற அறிவிப்பு வராததால் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

No comments :

Post a Comment