கே.வி. ஆனந்த் - தனுஸ் இணையும் 'அனேகன்'

No comments
கே.வி.ஆனந்த் தயாரிக்கும் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். மாற்றான் படத்திற்கு பின் அவர் தயாரிக்கும் அடுத்தம் படம் இதுவாகும். இப் படத்திற்கு அனேகன் என்று பெயர் வைத்துள்ளார். வழக்கம்போல் அவரது குழுவில் இருக்கும் எழுத்தளார் சுபாவுடன் இணைந்து திரைக்கதையை எழுதியுள்ளார். 



 முதலில் சூர்யா நடிப்பார் எனவும் விஜய் நடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது. இறுதியில் தனுஷ் நடிப்பதாக முடிவாகி உள்ளது. அவருக்கு ஜோடியாக மும்பையைச் சேர்ந்த அமிரா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். அதுல் குல்கர்னி, ஆசிஷ் வித்யார்தி, ஆகியோர் வில்லன்கள். ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். ஹெரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். 

 ராவணன் படத்திற்கு பிறகு கார்த்திக் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். செப்டம்பர் 2ஆம் திகதி பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. நமச்சிவாய வாழ்க... என்ற திருவாசக பாடலின் இறுதியில் வரும் ஏகன் அனேகன் இறைவன் அடிவாழ்க... என்ற வரியில் உள்ள அனேகன் என்ற வார்த்தை தான் படத்தின் தலைப்பு. அனேகன் என்றால் ஒன்றானவன், உருவில் பலரானவன் என்று பொருள்.

 அயன் போன்று காமெடி கலந்த ஆக்ஷன் படம். தனுஷிற்கு இது முக்கியமான ஆக்ஷன் படமாக இருக்கும். வியட்நாம், கம்போடியா, மலேசியா, பொலீவியா போன்ற நாடுகளிலும் அனேகன் படமாக இருக்கிறது என்கிறார் கே.வி.ஆனந்த்.

No comments :

Post a Comment