ஸ்ரீதேவி மகளை நடிக்க வைக்க போட்டி

No comments
ஸ்ரீதேவி- போனி கபூருக்கு ஜான்வி, குஷி என்ற 2 மகள்கள். ஜான்விக்கு தற்போது 16 வயது. படித்துக்கொண்டிருக்கும் இவரை தமிழ், தெலுங்கில் நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் போட்டிப் போடுகின்றனர்.

 ஸ்ரீதேவிக்கு தென்னிந்திய சினிமாவிலும் பாலிவுட்டிலும் இன்னும் மதிப்பு உள்ளது. அதை வைத்து, தெலுங்கில் ராம் சரண் தேஜா, நாக சைதன்யா படங்களில் ஜான்வியை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தது. இதே போல அல்லு அரவிந்த், தில் ராஜு ஆகியோரும் ஜான்வியை நடிக்க வைக்க போனி கபூரிடம் பேசினர்.

சில தமிழ் தயாரிப்பாளர்களும் கேட்டுள்ளனர். ஆனால் போனி கபூர் மறுத்துவிட்டார். ஸ்ரீதேவி கூறும்போது, ‘அவள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என நினைக்கிறேன். அது முடிந்ததும் திருமணம் செய்து வைக்க விரும்புகிறேன். என்ன நடக்கிறதென்று பார்ப்போம்’ என்று தெரிவித்துள்ளார்.


No comments :

Post a Comment