டப்பிங் பேசினார் ஓவியா

No comments
டப்பிங் பேசுவதற்கு நடிகை ஓவியாவுக்கு மலையாளம் கலந்த தமிழ் கைகொடுத்தது. தமிழ் படங்களில் மலையாளம் பேசும் ஹீரோயின்கள் அதிகம். இதனால் அவர்கள் ஏற்று நடிக்கும் வேடங்களுக்கு டப்பிங் கலைஞர்கள் குரல் கொடுப்பார்கள். மலையாள வரவுகளில் ஒருவரான ‘களவாணி‘ ஓவியா பேசும் மலையாள வாடை பேச்சுக்கு தற்போது மவுசு கிடைத்திருக்கிறது.

‘மதயானை கூட்டம்‘ என்ற படத்தில் இசை பள்ளியில் படிக்கும் மலையாள பெண்ணாக நடிக்கிறார் ஓவியா. இதனால் அவர் வழக்கமாக பேசும் மலையாள வாடை கலந்த பேச்சையே படத்திலும் பயன்படுத்த இயக்குனர் முடிவு செய்தார். நிறைய படங்களில் நடித்தாலும் தனது கேரக்டருக்கு தானே டப்பிங் பேச முடியவில்லையே என்று ஓவியா ஆதங்கத்தில் இருந்தார்.

அது இப்படத்தில் தீர்ந்திருக்கிறது. மலையாளம் கலந்த தமிழில் பேசி நடித்தால் யதார்த்தமாக இருக்கும் என்று இயக்குனர் சொல்ல குஷியானார் ஓவியா. டப்பிங்கும் பேசி முடித்தார்.

இது பற்றி ஓவியா கூறும்போது,‘இனிமேல் எதிர்வரும் படங்களுக்கு நானே சொந்த குரலில் பேசுவதற்கு இதுவொரு அடித்தளமாக அமைந்திருக்கிறது‘ என்றார்.

No comments :

Post a Comment