இளவட்ட ஹீரோக்களின் நாயகி நான்: ப்ரியா ஆனந்த்
இளவட்ட நாயகர்களின் நாயகி நான் என்று உற்சாகமாக கூறுகிறார் ப்ரியா ஆனந்த்.
வாமனன் படத்தில் அறிமுகமான ப்ரியாஆனந்துக்கு ஆரம்பத்தில் தமிழில் எதிர்பார்த்த வெற்றிகள் அமையவில்லை.
அதனால் தெலுங்கு, இந்தி என்று பரவலாக நடித்து வந்தவர், இங்கிலீஷ் விங்கிலீஷ், எதிர்நீச்சல் படத்துக்குப்பிறகு கொலிவுட்டில் கமர்சியல் குதிரையாகி விட்டார்.
அவருக்காக படங்கள் ஓடவில்லை என்றாலும், படங்கள் பெற்ற வெற்றி அவர் மீது வெளிச்சம் பாய்ச்சியதால், தற்போது ராசியான நடிகை என்கிற முத்திரையும் அவர் மீது விழுந்திருக்கிறது.
இதனால் ப்ரியாவை வளர்ந்து வரும் நாயகர்களுடன் மட்டுமே ஜோடி சேர்க்கிறார்கள் இயக்குனர்கள்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இப்போது நான்தான் இளவட்ட நடிகர்களின் நாயகி.
அந்த வகையில், அதர்வாவுடன் இரும்புக்குதிரை, சிவாவுடன் வணக்கம் சென்னை, விக்ரம் பிரபுவுடன் அரிமா நம்பி, கடல் கெளதமுடன் வை ராஜா வை என்று நான்கு படங்கள் உள்ளன.
இந்த நடிகர்களெல்லாமே வேகமாக வளரக்கூடியவர்கள். அதனால் இவர்களுடன் சேர்ந்து நானும் வேகமாக வளரப்போகிறேன் என்று பாசிட்டிவாக நட்பு வட்டாரங்களில் கூறி வருகிறார் ப்ரியாஆனந்த்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment