விஜய்யின் நட்பு... அமலா ஏமாற்றம்...

No comments
விஜய்யின் நட்பு கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தார் அமலா பால்.இப்போதெல்லாம் ஒரே ஹீரோயினை அடுத்தடுத்த படங்களுக்கு டாப் ஹீரோக்கள் ரிபீட் செய்வதில்லை. இதில் விஜய் மட்டும் விதிவிலக்கு. தொடர்ந்து இவரது படங்களில் த்ரிஷா ஹீரோயினாக நடித்துள்ளார்.

அதையடுத்து அசின். இப்போது காஜல் அகர்வால். ஒரே ஹீரோயினை தனது படங்களில் விஜய் தொடர ஒரே ஒரு காரணம்தான் இருக்கிறது. அது நட்பு. குறிப்பிட்ட ஹீரோயினுடன் விஜய்க்கு நட்பு ஏற்பட வேண்டும். அந்த ஹீரோயின் எந்த படத்துக்கு கால்ஷீட் சொதப்பினாலும் விஜய்யின் படத்தில் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும்.

இந்த விஷயங்களாலேயே முன் குறிப்பிட்ட நடிகைகள் விஜய்யுடன் தொடர்ந்து நடித்துள்ளனர். அந்த வகையில் 'தலைவா' படத்தில் நடித்த அமலா பாலுக்கு லக் அடிக்குமா என அவரது அபிமானிகள் எதிர்பார்த்தனர்.ஆனால் அடிக்கவில்லை. இதனால் அமலா ஏமாற்றம் அடைந்துள்ளாராம்.No comments :

Post a Comment