ரஜினி பற்றி பாலிவுட் நடிகர் விமர்சனம் ரசிகர்கள் ஆவேசம்
ரஜினியை விமர்சிப்பது போல் கேள்வி கேட்டிருக்கும் பாலிவுட் நடிகருக்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.ரஜினியை பற்றி பாலிவுட் ஸ்டார்கள் அமிதாப், ஷாருக்கான் உள்ளிட்டவர்கள் வானளாவ புகழ்கின்றனர். சமீபத்தில் ரஜினிக்கு அர்ப்பணிப்பதாக கூறி ரஜினியை வாழ்த்தி Ôலுங்கி டான்ஸ்Õ என்ற இசை ஆல்பத்தில் தீபிகா படுகோனுடன் சேர்ந்து ஆடினார் ஷாருக்கான். 'நான் ரஜினியின் ரசிகன்' என ஆமிர்கான் கூறியிருக்கிறார்.இந்நிலையில் பாலிவுட்டில் ஜொலிக்க முடியாத பட தயாரிப்பாளரும் நடிகருமான கமால் ரஷீத் கான் என்பவர் டுவிட்டர் இணையதள பக்கத்தில் ரஜினியை பற்றி குறிப்பிட்டு,'தென்னிந்திய சூப்பர் ஸ்டார் மிகவும் அழகான சூப்பர் ஸ்டாரா அல்லது சாதாரண தோற்றம் கொண்டவரா?' என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இதை பார்த்து ரஜினி ரசிகர்கள் ஆவேசம் அடைந்தனர். இதுபோல் கேள்வி எழுப்பிய கமால் ரஷீத் கானுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்துள்ளனர். 'தங்களை புரமோட் செய்துகொள்ள ரஜினியை போல் வம்புக்கு போகாதவர்களை விமர்சிப்பது சிலரின் வாடிக்கை. கமாலும் அந்த ரகம்தான்' என்கிறது பாலிவுட் வட்டாரம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment