'நூற்றாண்டு விழாவில் நேர்மை இல்லை' : காயத்ரி புகார்

No comments
75 வருடம் சினிமாவில் சேவையாற்றிய எங்கள் குடும்பத்தை ஒதுக்கிவிட்டார்கள் என சீறியிருக்கிறார் காயத்ரி ரகுராம்.இந்திய சினிமாவின் 100 ஆண்டு விழா சென்னையில் நடந்து வருகிறது. நடிகையும், நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் விழா குறித்து தனது அதிருப்தியை இணைய தள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

 அவர் கூறியது: நூற்றாண்டு விழா விருதுகள் வழங்கியதுபற்றி என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இது ஒருதலைபட்சமாக இருந்தது. எந்த உணர்வையும் பிரதிபலிக்கவில்லை. நேர்மையான முறையிலும் நடக்கவில்லை. உண்மையிலேயே சினிமாவில் சாதித்தவர்கள் நிலை என்ன என்று தெரியவில்லை.

இந்த துறையில் இத்தனை வருடம் பணியாற்றியதன் மூலம் முட்டாளாக்கப்பட்டிருக்கிறோம். 100 ஆண்டு சினிமாவில் நாங்களும் ஒரு அங்கம். எங்கள் குடும்பம் 75 வருடமாக சினிமாவில் இருக்கிறது. எனது கொள்ளுதாத்தா கே.சுப்ரமணியம் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருந்தார். எனது தந்தை, அத்தை மற்றும் உறவினர்கள் பலர் இத்துறையில் இருக்கிறார்கள்.

அவர்களில் யாருக்கும் விருது வழங்கப்படவில்லை. எனது கொள்ளு தாத்தா பிலிம்சேம்பர் நிறுவியவர்களில் ஒருவர்.

No comments :

Post a Comment