சக பாலிவுட் நடிகைகளுக்கு வயிற்றெரிச்சலை உண்டு பண்ணிய கத்ரினா!
சமீபத்தில், ஒரு இணையதளத்தில்,இந்திய அளவில் பிகினி உடை, எந்த நடிகைக்கு அம்சமாக இருக்கும் என்று நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், நயன்தாராவை பெரு வாரியான ரசிகர்கள் தேர்வு செய்தனர்.
அதைத்தொடர்ந்து, சமீபத்தில், இந்திய அளவில் செக்சியானநடிகை யார் என்றொரு கருத்துக்கணிப்பும் நடத்தப்பட்டு உள்ளது. இதில், அதிகப்படியான ரசிகர்கள், இந்தி நடிகை கத்ரினா கைப்புக்கே வாக்களித்து, அவரை முதலிடம் பெற வைத்துள்ளனர்.
அதோடு, தோற்றம், உடல் கவர்ச்சி, முக வசீகரம் என அனைத்திலும், மனம் கவர்ந்தவராக இருக்கிறார், என்றும், தங்கள் மனதில் உள்ளதை, ஆளாளுக்கு தெரிவித்து உள்ளனர். கத்ரினாவுக்கு கிடைத்துள்ள, இந்த பெருமை, சக பாலிவுட் நடிகைகளுக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment