குத்துப்பாட்டுக்கு ஆட சான்ஸ் கேட்கும் ஸ்ரேயா!
அஞ்சலி, லட்சுமிராய், ப்ரியாமணி உள்ளிட்ட சில நடிகைகள் கைவசம் படங்கள் இருக்கும்போதே குத்தாட்ட கோதாவிலும் குதித்து வருவதால், நான் ஜெயம் படத்தில் குடும்ப நாயகியாக நடித்தவள், நான் போய் குத்துப்பாட்டுக்கு ஆடுவதா? என்று சில ஆண்டுகளாக வீரவசனம் பேசிக்கொண்டிருந்த சதாவும் இப்போது மதகஜராஜாவில் குத்துப்பாட்டு நடிகையாகி விட்டார்.
இதையடுத்து, ஸ்ரேயாவும் குத்துப்பாட்டு நடிகையாக முடிவெடுத்திருக்கிறாராம். கந்தசாமி உள்ளிட்ட சில படங்களில் நடித்துக்கொண்டிருந்தபோதே, வடிவேலுவுடன் இந்திரலோகத்தில் நா.அழகப்பன் என்ற படத்தில் குத்தாட்டம் ஆடியவர்தான் ஸ்ரேயா.
ஆனால் பின்னர் அதையே காரணம் காட்டி, காமெடியனுடன் ஆடிய நடிகை என்று சொல்லி அவரை கோலிவுட் ஹீரோக்கள் ஏறக்கட்டினர்.
அதனால் சுத்தமாக படவாய்ப்பிழந்து இந்தி, கன்னட படங்களில் நடிக்க சென்று விட்டார் ஸ்ரேயா. இருப்பினும் அவர் அதிகமாக எதிர்பார்த்த சந்திரா என்ற படம் இன்னமும் திரைக்கு வரவில்லை.
இதனால் சில மாதங்களாக பொறுத்திருநது பார்த்த ஸ்ரேயா, அந்த படத்துக்காக காத்திருந்தால், தனக்கும் வயதாகிவிடும், திரையுலகமும் நம்மை மறந்து விடும் என்று இப்போது குத்துப்பாட்டுக்கு ஆட சான்ஸ் கிடைத்தாலும் இன்னொரு ரவுண்டு வரலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம்.
அதனால் தென்னிந்திய சினிமா மட்டுமின்றி, தனது பாலிவுட் மேனேஜர்களிடமும் தனது குத்தாட்ட பிரவேசம் குறித்து செய்தி அனுப்பியுள்ளாராம் ஸ்ரேயா.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment