நிமிர்ந்து நில் படத்தில் வில்லனாக நடிக்கிறார் ஜெயம் ரவி
வாசன் விஷுவல் வெஞ்சர்ஸ் நிறுவனம் சார்பில் கே.எஸ்.சீனிவாசன் தயாரிக்கும் படம், ‘நிமிர்ந்து நில்’. ஜெயம் ரவி, அமலா பால், சூரி, சரத்குமார், தம்பி ராமையா, பஞ்சு சுப்பு, கோபிநாத் உட்பட பலர் நடிக்கின்றனர். சமுத்திரக்கனி இயக்குகிறார்.
இதில் இரண்டு வேடத்தில் நடிக்கும் ஜெயம்ரவி, ஒரு வேடத்தில் வில்லனாக நடிக்கிறார். இதுபற்றி சமுத்திரக்கனி கூறியதாவது: உன்னை சரிசெய்துகொள். உலகம் தானாக சரியாகிவிடும் என்பதுதான் படத்தின் ஒன்லைன். இதில் 24 வயது இளைஞன் மற்றும் 48 வயது நடுத்தர வயது மனிதன் என இரண்டு கேரக்டரில் நடிக்கிறார் ஜெயம் ரவி. 48 வயது கேரக்டர் இதுவரை தமிழ் சினிமா பார்க்காததாக இருக்கும். நக்கல், நையாண்டி, பிளேபாய் மாதிரியான கேரக்டர். இதற்காக ரவி நிறைய உழைத்திருக்கிறார். இளம் வயது ரவியும் வில்லன் ரவியும் மோதும் சண்டைக் காட்சி அதிகப் பொருட்செலவில் சமீபத்தில் படமாக்கப்பட்டது.
சிபிஐ அதிகாரியாக வரும் சரத்குமாருக்கான ஆக்ஷன் காட்சியில் பிரமாண்டமான சேஸிங் வருகிறது. இது பேசப்படும் விதமாக இருக்கும். 90 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்தப் படம் தெலுங்கில் ‘ஜண்டாபாய் கப்பிராஜூ’ என்ற பெயரில் உருவாகிறது. நானி ஹீரோ. இவ்வாறு சமுத்திரக்கனி கூறினார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment