தீபாவளி போட்டியிலிருந்து முந்திக் கொண்ட‌ ராஜாராணி

No comments
ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசுடன் இணைந்து தயாரித்துள்ள படம் ராஜாராணி. ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சந்தானம், சத்யராஜ், சத்யன்னு ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிச்சிருக்கிற இந்தப் படத்தை ஷங்கர் அசிஸ்டெண்ட் அட்லீ டைரக்ட் செய்திருக்கிறார். படம் தொடங்கியதிலிருந்தே படத்துக்கு ஏகப்பட்ட பில்டப்கள் கொடுத்து விளம்பரம் செய்து வருகிறார்கள்.

 ஆர்யா, நயன்தாராவுக்கு கல்யாண பத்திரிக்கை அடிக்கிற அளவுக்கு இருந்தது விளம்பர ஸ்டண்ட். படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணத்தான் முதலில் நினைத்திருந்தார்கள். தீபாவளிக்கு ஆர்யா நடித்த இரண்டாம் உலகம் ரிலீசாவது உறுதியாகி இருப்பதால் அதற்கு முன்னதாக அதாவது வருகிற செப்டம்பர் 27ந் தேதி படம் ரிலீசாவதாக அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டார்கள். படத்தின் டிரைய்லரும், ஜி.வி.பிரகாஷ் இசையில் வந்திருக்கும் பாடல்களும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. “ராஜாராணி மனதை வருடும் ஒரு இனிய காதல் கதை.

 நெஞ்சை நெகிழச் செய்யும் ஒரு இனிய பயணம் இந்தப் படத்தில் நிச்சயம் உண்டு. திறமைகளின் சங்கமமாக இருக்கும் இந்தப் படம் நிச்சயம் பெரும் வெற்றி பெறும்” என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். “ஏ.ஆர்.முருகதாசுடன் இணைந்து நாங்கள் தயாரிக்கும் 3வது படம். எங்கள் பரஸ்பர உறவு இந்தி படங்களிலும் தொடர்கிறது. ராஜாராணி எங்கள் கூட்டுத் தயாரிப்பில் உருவான ஜனரஞ்சக படம். படத்தின் பாடல்களின் வெற்றி படத்தின் வெற்றியை உறுதி செய்திருக்கிறது” என்கிறார் பாக்ஸ் ஆபீஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி விஜய் சிங்.

No comments :

Post a Comment